Sunday, July 17, 2011

1 முதல் 6 வரை பள்ளிக்கூடமே வேண்டாம் .ப்ளிஸ் .






குழந்தைகளை நன்றாக ஆராய்ந்ததில் பிறந்தது முதல் 2 வருடங்கள் குழந்தைகள் தங்களின் பார்வையையும், புரிதலையும் செலுமைப்படுத்திக்கொள்கின்றன (இக்காலகட்டத்தில் தான் பெற்றோர்களின் பங்கு மற்றும் செயல் மிகவும் முக்கியமாக அதன்அறிவுத்தளத்தினை ஆக்கிரமிக்கிறது ).2- லிருந்து 5 வயது வரை குழந்தைகள் மேலும் பார்வையையும் ,புரிதலையும் செரிவுபடுத்துகின்றன ,சூழலுடன் தொடர்பினை ஏற்படுத்தும் அளவிற்கு அதன் செயல்பாடு வளர்கிறது .

குழந்தைகள் 5 வயதிற்குப்பின் ,5 வயதிற்குள் தன்னுள் ஏற்றுக்கொண்ட விசயத்தில்பயணித்து 12 வது வயதில் அதனை முன்னிருத்தி கால் வைத்து ,தொடர்ந்து ,பிறகு16 வது வயதினின்று அதன்வழி சமூகத்திற்குள் நுழைகின்றனர்.அதுவரை அவர்கள் சுதந்திரமானவர்களாகவே உணர்கின்றனர் இதுவே ,குழந்தைகள் தங்களின் வாழ்க்கை பயணத்தினை ஆரம்பிக்கும் பாதையாக உள்ளது .

எனவே ,இக்காலகட்டத்தில் எப்போதும் குழந்தைகளிடம் பயம் காட்டாதீர்கள் . அவர்கள் அச்சப்பட்ட மனேநிலையில் வளரஆரம்பித்து விடுவார்கள் . குழந்தைகளிடம் வீரம் பற்றியும் பேசாதீர்கள், உன்னால் முடியும் போன்ற அவர்களால் முடியாது என்ற விசயங்களில் பொய் கூறாதீர்கள் .அது அவர்களிடத்தில் தாழ்வு எண்ணத்தை ஏற்படுத்திவிடும் .குழந்தைகளிடம் உங்களின் சாகசங்களையோ குறைகளையோ கூறாதீர்கள் . அது அவர்களை தவறான பாதைக்கு இட்டுச்செல்லும் .குடும்ப விவகாரங்களையோ, கஷ்டநஷ்டங்களையோ அவர்களுக்கு தெரியுமாறு வைத்துக்கொள்ளாதீர்கள் .நமது கஷ்டம் குழந்தைகள் உணர்ந்தால் தான் நம்போல் ஆகாமல் சிறப்பானவராக வருவர் என்பது தப்பெண்ணம்.குழந்தைகளுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணாதீர்கள் .அது அவர்களை பெரியவர்களுக்கொன்று ஒரு உலகம் உண்டு என்று எண்ணி இது பெரியவங்க சமாச்சாரம் என்ற அச்சத்துடன் வளரஆரம்பித்து விடுவார்கள் (நாமெல்லாம் அப்படி வளர்ந்தவர்கள் என்பதால் தான் செக்ஸ் விழிப்புணர்வு இல்லாமல் வளரஆரம்பித்து அச்சப்பட்டு, அவஸ்தைப்பட்டதை ஒவ்வொருவரின் கடந்த காலமும் கூறும்).

அவர்களை எதார்த்தமாக வளர விடுங்கள் . அவர்களை அவர்கள் போக்கில் விடுங்கள் .அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலையே கூறுங்கள் .தெரியவில்லையெனில் தெரியவில்லை என்று கூறுங்கள். அது அவர்களின் அவர்களே  தெரிந்துகொள்ளும் ஆவலை அதிகரிக்கும் .அதனால் அரைகுறைபதிலை கூறாதீர்கள் .அது அவர்களை முடமாக்கும் .உங்களின் எதுவையும் (கருத்து, கொள்கை, இப்படி..) அவர்களுக்கு புகுத்தாதீர்.அவர்களின் கண்களில்படும் எல்லாம் அவர்களுக்கு புதிர்தான் .விடைகளை அவிழ்த்து விடுவதுதான் நாம் செய்யவேண்டிய வேலை .கற்றுக்கொள்வது அவர்களின் இயல்பான செயல் .கற்றுக்கொள்ளவேண்டும் என நாம் பரிதவிக்கக்கூடாது . அது வீண்.

ஒன்றைமட்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள் .
குழந்தைகள் பிறக்கும்பொழுதோ பலவிசயங்கள் அவர்களுக்கு ஆணையிடப்பட்டிருக்கின்றது .
அது

"சுவாசி உடல் இயங்கும் ".

"உண் உடல் வளரும் ".

"வளர உணவு தேவை ".

இதுபோன்று ...பல...

இதில் "வளர உணவு தேவை " என்பதுதான் தற்பொழுது நமது
குழந்தைகளின் குறும்புகளுக்கும் ,சேட்டைகளுக்கும் காரணம்
.மனிதன் ஆரம்பத்தில் உணவிற்காக அலைந்து, திரிந்து, ஓடி,
கண்டுபிடித்து ,போராடி பொற்று, பின் உண்டு ,மகிழ்ந்து, அயர்ந்தான் .காலப்போக்கில் உணவினை சேமித்து வைத்து உண்பதால்-அலைந்து ,திரிந்து ,ஓடி, கண்டுபிடித்து,போராடி பொற்று, பின் உண்ணாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாடு தான் குழந்தைகள் செய்யும் அனைத்தும் .

அதனால் குழந்தைகள் குறும்பு செய்கின்றன என கோபம்
கொள்ளாமல் அவர்களை அப்படியே அவர்களின் போக்கில்
விட்டுவிடுங்கள்.அப்படிவிடும் பட்சத்தில் அவர்களுக்கு இடப்பட்ட
கட்டளை  தீர்க்கப்பட்டு அவர்களை  அடுத்த நிலைக்கு தானே
உந்திச்செல்லும். இல்லாதுபோனால் நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் அன்னியப்பட்டே போவீர்கள் .குறும்பு செய்கின்றது என்பதற்காக  மழலையர் பள்ளி ,பிளே ஸ்கூல்  என உங்களிடமிருந்து அவர்களை பிரித்தீர்களெனில் அவர்கள் இருட்டடிப்பு செய்யப்பட்ட கட்டளைகளின் வெளிப்பாட்டினால் உங்களிடம் அந்நியமாக  நடந்து கொள்வார்கள் .அதனால் அந்நியமாக போவார்கள்  . எனவே இதனால் பயனேதும் இல்லை .

ஆதலால் ,குழந்தைகளிடம் மிகவும் கவனமாக இருங்கள்
.அவர்களின் வாழ்வை அவர்களே முடிவு செய்யட்டும் .
நீங்கள் மீறினால் ,அவர்களும் மீறுவார்கள் .ஜாக்கிரதை .
எனவே ,குழந்தைகளை பாரமாக நினைக்காதீர்கள் .
அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள் .
அவர்களை உற்று கவனியுங்கள் .
அவர்களின் அறிவுப்பசியை கண்டுபிடியுங்கள்.
அதற்கு உதவுங்கள் .
''சுதந்திரமே அறிவு " -என முதலில் உணருங்கள் .
நாம்மில் அதிகப்பேர் இன்னும் குழந்தைகள் தான் . 
அப்படியிருக்க நம் குழந்தைகளை ஏன் பெரியவர்களாக்க எண்ணுகின்றீர்கள் .


ஆதலால் ஆறு வயதை அடையும் வரை குழந்தைகளை குழந்தைகளாகவே வளரவிடுங்கள் தாயின் பராமரிப்பில் . இக்கால கட்டத்தில் மழலையர் பள்ளி மற்றும் குழந்தைகள் பள்ளி என சேர்த்து அவர்களை முதியோர் ஆக்காதீர்கள்.

அதனால்  1 முதல் 6  வரை பள்ளிக்கூடமே வேண்டாம் .ப்ளிஸ் .













. Download As PDF

6 comments:

cheena (சீனா) said...

அன்பின் சகோ நண்டு - நல்ல சிந்தனை தான் - உறுதிப்பட்ட செய்தி தானா ? என்ன தான் இருந்தாலும் அவர்கள் வீட்டில் செய்யும் குறும்புகளைத் தாங்க இயலாமல் தான் அனைத்துப் பெற்றோர்களும் 3 வயதிலேயே பள்ளிக்கு அனுப்பி விடுகின்றனர். இனி அவர்கள் மாறுவார்களா ? சமூகம் அவர்களை மாற விடுமா ? ஐயம் தான். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Mohamed Faaique said...

//அதனால் 1 முதல் 6 வரை பள்ளிக்கூடமே வேண்டாம் .ப்ளிஸ் .//

உங்களிம் பதிவுகளில் பிடித்த பதிவு எது என்று கேட்டால் கண்ணை மூடிக் கொண்டு சொல்வேன் இந்தப் பதிவை... சூப்பர் ஸார்..

goma said...

ப்ரி ஸ்கூல்,ப்ளேசெண்டர்,எல்கேஜி யூகேஜி நடத்துபவர்கள் எல்லோரும் உங்களைத் தாக்க வருவார்கள் ஜாக்கிரதை.

எண்ணங்கள் 13189034291840215795 said...

அவர்களின் சேட்டைகளை அனுபவியுங்கள் .//

சத்திய வார்த்தை. நம்மை அவர்கள்தான் வளர்க்கிறார்கள்.. நாம்தா ன் கற்கவேண்டியது அனேகம் அவர்களிடமிருந்து..

( என் குழந்தையை சர்ச் கு கூட்டி சென்றாலும் , அவனுக்கு God Ganesh தான் ரொம்ப பிடிக்குமாம்..:) )

எண்ணங்கள் 13189034291840215795 said...

அவர்கள் போக்கிலேயே போய் வளர்ப்பது சுவாரஸ்யம்.. பலர் நம்மை முட்டாள் , பையித்தியம் என நினைத்தாலும்..

நன்று.

ஈரோடு தங்கதுரை said...

நல்ல கருத்துக்கள் .. !முக்கியமான & தேவையான பதிவு
http://erodethangadurai.blogspot.com/
Apple iPhone - இப்போது விலை வெறும் Rs.3,333 மட்டுமே ... !

Post a Comment

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com