வெள்ளி, 4 மார்ச், 2011

பிரதிநிதித்துவம் இல்லாத தேர்தல் .

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது .ஏதோ நேற்றுத்தான் ஆரம்பித்த புதுக்கட்சிகள் போல குழப்பத்தில் வியூகங்கள் வகுத்துக்கொண்டே உள்ளன பல தேர்தல்கள் கண்ட கட்சிகள். இந்தத்தேர்தலின் முடிவுகள் ஏற்கனவே தெரிந்துவிட்ட நிலையில் பேச்சுவார்த்தை மேல் பேச்சுவார்தைகள்,
அடுத்து ஆளப்போகும் கூட்டணிக்கு 178+ இடங்கள் கிடைக்கும் என்ற நிலையில் .

இன்று எங்களின் தமிழ்நாடு &புதுச்சேரி வழக்கறிஞர்கள் பேரவை தேர்தல் 04.03.2011 மிகவும் சிறப்பாக நடந்தது முடிந்தது.

இது சம்பந்தமாக எனது மனதில் தோன்றியதை இங்கு பதிவு செய்கிறேன் .

வழக்கறிஞர் பேரவை என்பது மிகவும் சிறந்த உயரிய அமைப்பு. வழக்கறிஞர்களின் தூண் .ஆனால்,இந்தகைய உயரிய அமைப்பிற்கு நடந்த தேர்தலில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் முற்றிலும் இல்லாதது மிகவும் கவலையளிக்கிறது. மிகச்சிறந்த பெண் வழக்கறிஞர்கள் இருக்கின்ற நிலையிலும்,பெண்களுக்கு தக்க இட ஒதுக்கீடு இல்லை .ஏன் இந்த நிலை?. இதை மிகவும் துரதிஷ்டவசமான ஒன்றாகவே கருதுகிறேன் .

இரண்டாவதாக இது  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள  வழக்கறிஞர் பேரவை தேர்தல் .ஆனால்,வாக்குச்சீட்டோ முற்றிலும்ஆங்கிலத்தில் .அது மட்டுமா ,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் பேரவையின் அலுவலக மொழியும் ,ஆட்சிமொழியும் முற்றிலும் ஆங்கிலம்.ஏன் இந்த நிலை?.இதையும் மிகவும் துரதிஷ்டவசமான ஒன்றாகவே கருதுகிறேன் .

இந்த நிலை மாற , ஒன்றிணைவோம் .

நாம் இருக்கும் இடத்தில் அன்னைத்தமிழுக்கு உயர்வு செய்வோம் ..


.
     
Download As PDF

Bloggers.com

Nandunorandu - Find me on Bloggers.com