ஞாயிறு, 1 ஜனவரி, 2017

கடவுளை காணலாம் வாருங்கள்.



கடவுளை காணமுடியுமா ? அனைவரும் காண முடியுமா ?  இது சாத்தியமா என்ற கேள்விக்கு  இதற்கு முன் யாரும் எத்தகைய பதிலும் கூறவில்லை.அதிக அழுத்தம் கொடுக்கப்பட்டு பெற்ற பதில்கள் அனைத்தும் யாருக்கும் திருப்தியில்லை.  எளிதான பதிலோ எளிதான வழியோ அல்லது எளிய தீர்வோ கூறாத இக்கணம் வரை  ...

கடவுள் என்ற பிம்பம் சார்ந்த அறிவுசார்ந்த  சிந்தனை இல்லாத இளம்பருவத்தில் கடவுளை கண்ட பொழுதும், பின் கடவுள் என்ற மிகப்பெரிய ஆளுமை உடைந்து தகர்ந்து போன கணத்தில் அதனை வெளிப்படுத்த முனைந்த காலத்தில் கண்ட கடவுளையும் ஒப்பிட்ட பொழுது என்னுள் இரு தடவை கடவுளை கண்டடைந்த சிலிர்ப்பி என்னை உவர்த்தித்தது.

உவர்த்தித்தல் என்னை உலகிற்கு அதனை உரக்க உறைக்க ஊர்த்தித்தது.

உவர்த்தலும் ஊர்த்தலும் நீங்கும் முன் உலகிற்கு உணர்த்தும் உய்விப்பில் திளைத்த நிமிடத்தில் ஊர்ந்து சென்ற காலங்கள் பலவாகின.இன்னும் இன்னும் என்று உருண்டு, சலித்தெடுத்துக்கண்டடைந்த அனைத்து சேகாரங்களும் ,அடுத்தடுத்து அழுகி அழிந்தது கண்டு முகிழ்ந்து முகிழ்ந்து மீண்டும் மீண்டும் சுற்றும் சுயங்களின் சூத்திரம் கண்டு எளிய தீர்வை முன்வைக்க திரண்டபொழுது திடீரென ஏற்பட்ட சொருபா வீக்கம் சற்று என்னை ஆழற்சித்தது .அழச்சியின் கிளர்ச்சி நீக்கம் ஆண்டுகளை உண்டு உருண்டன.சுற்றும் முறை சுழற்சி ஆதலால் சூழ்ச்சிகள் சுக்கல்சுக்கலாக சுழலின் சுற்றில் சிதறின.சிதறல்களின் சின்னமாக எழுந்த ஒன்று ஒன்றை காட்டியது.அது உணர்த்திய ஒரு விபாகம் அனைத்தையும் கண்டடைய செய்தது.


கடவுளை காணலாம் வாருங்கள். இப்படி அழைப்பது என்பது மதவாதிகளுக்கு ஒரு தந்திரமாக இருக்கலாம்.அவர்கள் பக்கம் அனைவரின் கவனத்தையும் திருப்ப இது ஒரு உத்தியாகவும் அவர்களால் கையாளப்படுகிறது.ஆனால் என்னைப்பொருத்தவரை இது அப்படிப்பட்டதல்ல.இது அந்தளவிலான ஒரு நீல்நொடிபயணம் .ஆனால் இதற்கு என்னை பின்தொடர்வதில் உள்ள உளச்சிக்கலால் ,பின்தொடர்வதில் ஏற்படும் தொடர் இடரால் பின் தங்கினால் கடவுளை என்பது ஒரு காண்டுமிராண்டித்தனமாக தெரியும் .ஒரு தீர்வு இப்படி முடிந்தால் அதற்கு பொறுப்பு நானல்ல .


கடவுளை காண  என்பது கண்டடைய விரும்புபவரின் உணர்வுசார்ந்ததா உடல்சார்ந்ததா அறிவுசார்ந்ததா அறியாமைசார்ந்ததா என்பதனின்று ஆரம்பிக்கிறது.சார்புபற்றிய முடிவெடுக்கும் நிலையில் இருக்கும் இருப்பானது தொடர்பின் தோடுதலில் இருந்து பிரிந்துசெல்லும் பார்வையின் பாதையில் பயணிக்கிறது.    



தொடரும்...

Download As PDF

12 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லபகிர்வு...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai சொன்னது…

Super
t.m.+1

ஸ்ரீராம். சொன்னது…

முதிர்ந்த எண்ணங்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

வலிப்போக்கன் சொன்னது…

தெய்வம் என்றால் அது தெய்வம்..சிலை என்றால் அது சிலைதான் என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.......

Unknown சொன்னது…

கடவுள் என்றாலே குழப்பம்தான் வருமா?#உவர்த்தலும் ஊர்த்தலும் நீங்கும் #என்று தொடங்கும் பாராவைப் படித்து புரிந்து கொள்வதற்குள் மண்டைக் காயுதே :)

Parameswaran C சொன்னது…

யார் கடவுள்?
மரியாதைக்குரிய ஐயா,
ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன் கூடிய வணக்கம்.கடவுளைக் கண்டோர் உண்டா? என்று கேள்வி எழுப்பும்போதே கடவுள் என்றொரு தனிப்பட்ட உருவம் இருப்பதாகத்தானே அனைவரையும் சிந்திக்க வைக்கிறது.கடவுள் என்பது என்னைப்பொறுத்தவரை நம்பிக்கை இழக்கும்போது,நமது நிகழ்வில் செயலிழக்கும்போது,எதிர்பார்த்தவைகள் நிறைவேறாதபோது,பேராபத்தில் சிக்குண்டபோது தன்னால் எதுவும் செய்ய இயலாது என்ற சூழ்நிலை உருவாகும்போது அவ்வாறான விசயங்களை நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயச்சூழலில் தன்னை அறியாமல் தன் சக்திக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்றினை உதவிக்கோ ,ஆறுதலளிக்கவோ,ஊக்கபடுத்தவோ,அதாவது நீந்தத்தெரியாதவன் கிணற்றில் விழுந்தவன் தண்ணீரில் மிதங்கும் பாம்பையே தன் பாதுகாப்பிற்காக கையில் பிடிப்பவனைப்போல நமக்கு தேவைப்படும் ஒன்றை நாம் கடவுளாக ஏற்கலாம்.அதாவது நம்முடைய சக்திக்கு மீறிய,ஆற்றல் மிகுந்த எந்த ஒன்றும் கடவுளாகவே ஏற்கலாம்.உதாரணமாக தாய்,தந்தை,குரு,வழிகாட்டி,ஆபத்துக்குதவுவோன்,இயற்கை சக்திகள் இவ்வாறானவர்களை நாம் கடவுளாக ஏற்க வேண்டும்.என்றுதானே நம்முடைய முன்னோர்களும் கூறி வழிகாட்டிச்சென்றுள்ளார்கள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தியாசமான சிந்தனை தொடரட்டும்...

அபயாஅருணா சொன்னது…

புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

G.M Balasubramaniam சொன்னது…

ஒன்று பற்றி ஒரு சிந்தனை எழும்போது கேள்விகளும் எழலாம் எனக்கு அம்மாதிரியான சிந்தனையின் பயனாக எழுதிய பதிவின் சுட்டி தருகிறேன் படித்துப்பார்த்துக் கருத்து கூறுங்கள்
http://gmbat1649.blogspot.in/2013/03/blog-post_26.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அருமையான பொருண்மையை நோக்கிய விதம் பாராட்டத்தக்கது.

இ.பு.ஞானப்பிரகாசன் சொன்னது…

புதுமையான தொடர் போல! தொடர்கிறேன்.

ஒரு சிறு வேண்டுகோள்! கட்டுரையில் நிறைய எழுத்துப்பிழைகள். கொஞ்சம் கவனமாக எழுதினீர்களானால் படிக்க எங்களுக்கு எளிதாக இருக்கும்.

உவர்த்தல் என்றால் உப்பாகுதல் என்றும், ஊர்த்தல் ஊர்ந்து செல்ல வைத்தல் என்றும்தானே பொருள்? ஆர்வம், உந்தல் என்றெல்லாம் பொருள் உண்டா என்ன?

கருத்துரையிடுக

" ஆழ்ந்த பார்வையில்லாமல்
எதையும் புரிந்துகொள்ளமுடியாது "